கிருஷ்ணகிரி: சூளகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உத்தனப்பள்ளி ஜங்ஷன் அருகே போலீசார் வாகன தணிக்கையில் இருந்தபோது, அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மதுபானங்கள் இருந்தது. மதுபானங்கள் வைத்திருந்த நபரை கைது செய்து, அவரிடமிருந்து வாகனத்துடன் மதுபானங்கள் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.




















