கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது ஓசூர் வேளாங்கண்ணி பள்ளி எதிரில் உள்ள ராமநாயக்கன் ஏரி பூங்கா அருகே வாகன தணிக்கையில் இருந்தபோது அவ்வழியாக வந்த இரண்டு நபர்களை சோதனை செய்த போது அவர்களிடம் கஞ்சா இருந்தது. கஞ்சா வைத்திருந்த நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து வழக்குப்பதிந்து குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.



















