கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் காவல் நிலைய பகுதியான பாப்பாரப்பட்டி அருகே உள்ள பெரிய தம்பி கொட்டாய் கிராமத்தில் எதிரியின் வீட்டில் பின்புறத்தில் கஞ்சா செடி வளர்ப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் சென்று சோதனை செய்தபோது கஞ்சா செடி இருந்தது. கஞ்சா செடி வளர்த்த நபரை கைது செய்து, அவர்களிடமிருந்து சுமார் 761கிராம் கஞ்சா செடி பறிமுதல் செய்து காவல் நிலையம் வந்து வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.



















