இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் துறை மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர குற்றத் தடுப்பு கலந்தாய்வு கூட்டத்தில், 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பணிகளில் சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகள் பாராட்டப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G. சந்தீஷ் கலந்து கொண்டு, தேர்தல் காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பையும், சட்டம் மற்றும் ஒழுங்கையும் திறம்பட பராமரித்து சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்து சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார். மேலும், காவல்துறையினரின் அர்ப்பணிப்பு மிக்க சேவை மற்றும் பொறுப்புணர்வான செயல்பாடுகள் காரணமாக தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றதாகவும், எதிர்காலத்திலும் இதே உறுதிப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தினார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















