நாமக்கல் : நாமக்கல் மாவட்டம் கொள்ளை வழக்கில் தொடர்புடைய குற்றவாளியான அஜித் (26). தந்தை பெரியசாமி என்பவரை காவல்துறையினர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். அவரின் தொடர் குற்றச்செயல்கள் மற்றும் பொதுமக்களின் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருந்த நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்க குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.




















