திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைகுறிச்சி, கோட்டைவிளை தெருவை சேர்ந்த சந்தான பாரதி (31). என்பவர், தனக்கு சொந்தமான ஆட்டோவில் பள்ளி குழந்தைகளை ஏற்றிக் கொண்டு, ஆத்தியடி விலக்கு அருகே செல்லும்போது, ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பள்ளி குழந்தைகள் காயமடைந்தனர். ஆட்டோ ஓட்டுநர் மது போதையில் இருந்ததாக கல்லிடைகுறிச்சி காவல் நிலையத்தில் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் கொலையாகாத மரணம் விளைவிக்கின்ற குற்ற முயற்சிக்கான பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
குடிபோதையில் வாகனம் ஓட்டுவோர், தங்களின் செயலால், பிறர் உயிருக்கும் உடலுக்கும் தீங்கு ஏற்படும் என்பதனை நன்கு அறிந்தே, அப்படி செய்கிறார்கள்.
இதற்கு, அஜாக்கிரதை குற்றம் என்று மட்டும் சாதாரணமாக நடவடிக்கை எடுக்காமல், கொலையாகாத மரணம் விளைவிக்கின்ற குற்ற பிரிவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரப்படுகிறது. இதற்கான அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம். பொதுமக்கள் தங்கள் உயிருக்கும், பிறரின் உயிரின் பாதுகாப்பிற்கும், மது போதையில் வாகனம் ஓட்டாமல் சட்டப்படி பொறுப்புடன் நடக்குமாறு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. வி. பிரசண்ண குமார், இ.கா.ப., கேட்டுக்கொண்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















