சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நடராஜா தியேட்டர் அருகே, காரைக்குடி தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் தலைமையில் பொதுமக்களுக்கு போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் சிறப்பு சார்பு ஆய்வாளர் பூபாண்டி மற்றும் தலைமை நிலைய காவலர் ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கனிவான முறையில் அறிவுரைகள் வழங்கினர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















