திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பழவூர் பகுதியில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட காவல்கிணறு பகுதியை சேர்ந்த கிருஷ்ண மூர்த்தி மகன் நாகராஜன் என்ற காக்கா நாகராஜன் (42). என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததால் பழவூர் காவல் ஆய்வாளர், சுரேஷ்குமார் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்க விடுத்த வேண்டுகோள் படி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.V.பிரசண்ண குமார், இ.கா.ப., பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில், நாகராஜனை குண்டர் சட்டத்தில் பாளை மத்திய சிறையில் (28.05.2026) அன்று அடைத்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















