நாமக்கல்: காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கள்ளங்காட்டு பகுதியில் உள்ள தங்கம் பேக்கரி அருகே, தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்து வந்த தர்மராஜ் (38). என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேற்கொள்ளப்பட்ட சோதனையில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து, தர்மராஜ் மீது வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் விற்பனைக்கு எதிராக காவல்துறையின் நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.




















