திருநெல்வேலி : திருநெல்வேலி காவல் சரக துணைத் தலைவர், ப . சரவணன் இ.கா.ப., தலைமையில், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் R. ஸ்டாலின், இ.கா.ப., திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.V. பிரசண்ண குமார், இ.கா.ப., தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்,A. மயில்வாகனன் இ.கா.ப., தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், C. மதன், இ.கா.ப., ஆகியோர் மேற்பார்வையில் தேர்தல் நடத்தை விதிகள் சம்பந்தமான சட்ட நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வரப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக (20.04.2026) அன்று ஒரே நாளில் திருநெல்வேலி காவல் சரகத்தில், முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற 31 வழக்குகளில் ரூ.58.38 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், விதிமுறைகளை மீறி மதுபானங்களை பதுக்கி விநியோகிக்க முயன்றவர்கள் மீது 167 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் மொத்தம் 1067 லிட்டர் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் கடந்த மூன்று நாட்களில், காவல் சரகத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக மொத்தம் 51 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூபாய் 1 கோடி 42 லட்சம் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















