திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் காவல்துறையின் “ஆபரேஷன் SHIELDNET” என்ற நடவடிக்கையின் மூன்றாவது நாளான (22.05.26) அன்று நடைபெற்ற தீவிர சோதனையில் , 32 சரித்திர பதிவேடு குற்றவாளிகள், நிலுவையில் இருந்த 8 பிடிவாரண்டுகள், 4 நபர்களுக்கு எதிராக 126 BNSS தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் வாகன சோதனையின் போது போது பதிவு எண் இல்லாமல் இயக்குதல், அதிவேகமாக மற்றும் அசம்பாவிதத்தை ஏற்படுத்தும் வகையில் ஓட்டுதல், அதிக ஒளி விளக்குகள் பயன்படுத்துதல், மற்றும் சட்டவிரோத பெயர் மாற்றங்கள் செய்த 105 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.குற்றத் தடுப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களும் இணைந்து இந்த சிறப்பு நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















