கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கீழ் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு இவர் தனது குழந்தையுடன் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக ஊத்தங்கரை வந்திருந்தார். அந்த சமயத்தில் குழந்தை வழி தவறி ரோட்டில் அழுது கொண்டிருந்தது இதனை அவ்வழியாக வந்த பொதுமக்களில் ஒருவர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார் உடனடியாக பணியில் இருந்த காவலர்கள் பத்து நிமிடத்தில் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர் காணாமல் போன குழந்தையை 10 நிமிடத்தில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த காவலர்களுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்




















