திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 597 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சம்பவம் தொடர்பாக லால்குடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



















