திருச்சி: சோமரசம்பேட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கள்ளச் சந்தையில் மதுபானம் விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 51 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




















