கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் குற்றங்களை முன்கூட்டியே தடுத்து, பொதுமக்களுக்கு பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை உணர்வை ஏற்படுத்தும் நோக்கில் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஸ்டாலின், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர நடைரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தின் முக்கிய சாலைகள், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள், வணிக வளாகங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர். இந்த நடவடிக்கையின் மூலம் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட சமூக விரோத செயல்களைத் தடுக்கவும், சட்டம்-ஒழுங்கை நிலைநிறுத்தவும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.




















