கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின், IPS அவர்கள் தலைமையில், 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து பாதுகாப்பு பணிகளும் திட்டமிட்டும், சிறப்பாகவும் மேற்கொள்ளப்பட்டு, எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி அமைதியான முறையில் நிறைவு பெற்றன. தேர்தல் பரப்புரை பாதுகாப்பு தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்ததிலிருந்து, மாவட்டம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் மேற்கொண்ட பரப்புரைகளுக்கு காவல்துறை சார்பில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அனைத்து நிகழ்வுகளும் சீராக நடைபெற உறுதி செய்யப்பட்டது.
தேர்தல் நாள் பாதுகாப்பு. வாக்குப்பதிவு நாளில், மாவட்ட காவல்துறையின் தீவிர மற்றும் துல்லியமான பாதுகாப்பு நடவடிக்கைகளால், எந்தவித குற்றச்செயல்கள் அல்லது அசம்பாவிதங்களும் இன்றி, அமைதியான சூழலில் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு. மாவட்டத்தின் ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாகர்கோவில் கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பான முறையில் சேமிக்கப்பட்டு, 24 மணி நேர போலீஸ் கண்காணிப்பில் வைக்கப்பட்டன.
வாக்கு எண்ணிக்கை நாள் பாதுகாப்பு. வாக்கு எண்ணிக்கை பணிகள் நாகர்கோவில் கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்று, அதற்காக பலத்த மற்றும் பலத்தடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. எண்ணிக்கை மையத்திலும், மாவட்டம் முழுவதும் காவல்துறை தீவிர கண்காணிப்பில் செயல்பட்டு, எந்தவித அசம்பாவிதங்களும் இல்லாமல் பணிகள் வெற்றிகரமாக நிறைவு பெற்றன. நாட்டின் ஜனநாயகத் திருவிழாவை சிறப்பாக நடத்தி முடிக்க, முழுமையான ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள், அரசு துறை அலுவலர்கள், ஊடகத்துறை நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்படுகின்றன.



















