கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் குற்றச் செயல்களை முன்கூட்டியே தடுத்து, பொதுமக்களிடையே பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை உணர்வை ஏற்படுத்தும் நோக்கில், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஆர். ஸ்டாலின், ஐபிஎஸ், அவர்களின் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர நடைரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், சட்டம்-ஒழுங்கை நிலைநிறுத்தவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.




















