நாமக்கல் : நாமக்கல் மாவட்டம் வெப்படை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லட்சுமிபாளையம் சரவணா நகர் பகுதியில், அதிக வட்டி மற்றும் அபராதத் தொகை கோரி இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆவணங்களை விடுவிக்க மறுத்ததாக குற்றம்சாட்டப்பட்ட நிதி நிறுவன உரிமையாளர் சரவணகுமார் (41). என்பவரை வெப்படை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.




















