கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது ABM அஸ்வினி புளு மெட்டல் ரோடு, பட்டா குருபரப்பள்ளி அருகில் கஞ்சா வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று சோதனை செய்ததில் அங்கு இரண்டு நபர்கள் சட்டவிரோதமாக சுமார் 10 கிலோ கஞ்சா வைத்திருந்தார்கள். கஞ்சா வைத்திருந்த இரண்டு நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து வாகனத்துடன் சுமார் 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து காவல்நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.




















