திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், முருகேசன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியின் போது, பொழிகரை அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த சேரன்மகாதேவி பகுதியை சேர்ந்த மதன் என்ற மாயாண்டியை (19). சோதனை செய்து பார்த்தபோது, கஞ்சா விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இது குறித்து காவல் உதவி ஆய்வாளர், அன்னஜோதி வழக்கு பதிவு செய்து மதன் என்ற மாயாண்டியை கைது செய்து அவரிடம் இருந்து சுமார் 80 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















