திருநெல்வேலி: திருநெல்வேலி சுத்தமல்லி காவல் நிலைய காவல்துறையினர் சுத்தமல்லி விலக்கு அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர் . அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் இருசக்கர வாகனத்தில் வந்தவரைப் பிடித்து விசாரித்த போது அவர் திருநெல்வேலி நகரத்தைச் சேர்ந்த சங்கர் ராஜா (24). என்பதும், விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது. இது குறித்து சுத்தமல்லி காவல் ஆய்வாளர், சுந்தரமூர்த்தி வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து, இருசக்கர வாகனம் மற்றும் 1 கிலோ 100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















