திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், அனிஸ் தலைமையில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் இருந்த போது, ராதாபுரத்தை சேர்ந்த நாராயண பெருமாள் (27). வடக்கன்குளத்தை சேர்ந்த சஞ்சய் (19). ஆகிய இருவரும் வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்து பார்த்தபோது கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இது குறித்து, பணகுடி காவல் ஆய்வாளர், ராஜாராம் வழக்கு பதிவு செய்து நாராயண பெருமாள், சஞ்சய் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 1 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தார்.திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















