திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.V.பிரசண்ணகுமார்,இ.கா.ப, தலைமையில் (09.06.2026) அன்று காவல் அதிகாரிகளுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை, நிலுவையில் உள்ள வழக்குகள், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது உட்பட ஆலோசிக்கப்பட்டது.
முன்னதாக காவல்துறை வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என காவல் கண்காணிப்பாளர் ஆய்வு மேற்கொண்டு வாகன ஓட்டுநர்களுக்கு முக்கிய அறிவுரைகள் வழங்கி, வாகனங்களின் நிறை குறைகளை கேட்டு தெரிந்து கொண்டார். பின்பு மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 66 நபர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர், நற்சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார்.இக்கூட்டத்தில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், அரசு வழக்கறிஞர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்



















