கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது N. புதூர் கிராமம் பரேக்கல் கொட்டாயில் உள்ள எதிரியின் வீட்டில் உரிமம் இல்லாமல் நாட்டுத்துப்பாக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் குற்றவாளியின் வீட்டின் பின்புறம் சென்று சோதனை செய்தபோது அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி ஒன்று வைத்திருந்தார். நாட்டு துப்பாக்கி வைத்திருந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.



















