திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல்துறையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் தேவபாலன் சாமுவேல். அவர் கடந்த (07.03.2026) அன்று பணியில் இருந்த போது உயிரிழந்தார். இந்நிலையில் உயிரிழந்த காவல்துறையினரின் குடும்பத்திற்கு வழங்கப்படும் ஆயுள் காப்பீட்டு தொகை ரூ.15,00,000/- காசோலையை (13.04.2026) அன்று, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சேகர் தேஷ்முக் சஞ்சய் இ.கா.ப., மறைந்த தேவபாலன் சாமுவேல் குடும்பத்தினரிடம் வழங்கினார். உடன் காவல் துணை ஆணையர் S.விஜயகுமார், (மேற்கு) பேங்க் ஆப் பரோடா வங்கி பிராந்திய மேலாளர், ஜெய் கிஷன் மற்றும் வங்கி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்



















