கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அட்கோ காவல் நிலைய எல்லைக்குட்பட்ட NGGOS காலணியில் அருள்ராஜ் என்பவர் , வாடகை வீட்டில் குடியிருந்து கொண்டு ஓசூரில் உள்ள டெலிகாலிங் அலுவலகத்தில் பில்ட் எக்ஸ்கியூட்டியாக வேலை செய்து வருவதாகவும், (26.05.2026) ஆம் தேதி இரவு சுமார் 21.00 மணிக்கு தான் குடியிருக்கும் வீட்டின் அருகே தன்னுடைய இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு மறுநாள் (27.05.2026) ஆம் தேதி காலை சுமார் 06.45 மணிக்கு வந்து பார்த்தபோது நிறுத்தி இருந்த இருசக்கர வாகனம் காணவில்லை என அக்கம் பக்கம் கேட்டும், பல இடங்களில் தேடியும், கிடைக்காததால் யாரோ திருடி சென்று விட்டதாக தெரிந்து அட்கோ காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்து போலீசார் விசாரணை செய்து இருசக்கர வாகனம் திருடிய நபரை கைது செய்து அவரிடமிருந்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.




















