திருநெல்வேலி: திருநெல்வேலி நகரம், கோடீஸ்வரன் நகரைச் சேர்ந்த 31 வயது இளைஞர் ஒருவர் தனியார் நிறுவன மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவரை சமூக வலைதள செயலி மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் இணையவழி முதலீட்டின் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதை உண்மையென நம்பி முதலீடு செய்த அவருக்கு முதலில் லாபமாக சிறு தொகையை அனுப்பிவிட்டு பின்னர் அதிக பணம் செலுத்தினால் அதிக லாபம் பெறலாம் எனக் கூறி அவரிடமிருந்து ரூ.5,53,770 -ஐ பல்வேறு தவணைகளாக வங்கிக் கணக்குகளில் பெற்றுக்கொண்டு மோசடி செய்துள்ளார். இது குறித்து திருநெல்வேலி மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வாலிபர் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த தில்லான் (26). அஜித் (27). ஆகியோரை கைது செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















