இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் ஆர்எஸ் மங்கலம் விளக்கு பகுதியில் தொடர்ந்து விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் நடைபெற்று வருவது பொதுமக்களிடையே கவலை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாக அந்த பகுதியில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் விபத்துகள் அதிகரித்து வருவதாக கூறிய சமூக ஆர்வலர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து வேகத்தடைகள் அமைத்து, அவற்றில் மஞ்சள் மற்றும் சிவப்பு நிற எச்சரிக்கை அடையாளங்கள், ஒளிரும் குறியீடுகள் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இராமநாதபுரத்தில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. அக்பர் அலி




















