திருப்பத்தூர்: வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் சூழலை உருவாக்கும் நோக்கில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி வி. சியாமளா தேவி, இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, ஜோலார்பேட்டை காவல் ஆய்வாளர் தலைமையில் இந்த அணிவகுப்பு நடைபெற்றது.
ஜோலார்பேட்டை ஜே.என். பகுதியில் தொடங்கி, வக்கணம்பட்டி, கோடியூர், போலிஸ் ஸ்டேஷன் ரோடு வழியாக சிறுவிளையாட்டு அரங்கம் வரை அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பில் காவல்துறையினருடன் துணை ராணுவப் படையினரும் இணைந்து சுமார் 50 பேர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பாதுகாப்பு குறித்து நம்பிக்கை அளித்தனர்.




















