மதுரை: மதுரை மாவட்டத்தில் அதிக வேகத்தில் சென்று விபத்துகளை ஏற்படுத்தும் வாகனங்களைக் கண்டறிந்து அபராதம் விதிக்க, அதிநவீன ஸ்பீடு ரேடார் கன் (Speed Radar Gun) தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் தொடக்கமாக, மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் வருகை தந்து, இன்று ஒத்தக்கடை நான்கு வழிச்சாலை சந்திப்பில் இப்பணியை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்க உள்ளார். இதனைத் தொடர்ந்து, மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து முக்கிய நான்கு வழிச்சாலைகளிலும் (Four Ways) இக்கருவிகள் பயன்படுத்தப்பட்டு ஓவர் ஸ்பீட் வழக்குகள் (Over Speed Cases) தீவிரமாகப் பதிவு செய்யப்பட உள்ளன.
முக்கிய அம்சங்கள்:
வேக வரம்பு அமைப்பு: சாலையோரம் ஸ்டாண்ட் மூலம் வைக்கப்படும் இக்கருவியில், அந்தந்தப் பகுதிகளுக்கான குறிப்பிட்ட வேக வரம்பு முன்கூட்டியே பிக்ஸ் செய்யப்படும். துல்லியமாக படம் பிடித்தல்.
நிர்ணயிக்கப்பட்ட வேகத்தைத் தாண்டிச் செல்லும் வாகனங்களை மட்டும் இது ஃபோகஸ் செய்து கேப்சர் செய்யும். கலர் புகைப்படம் மற்றும் விவரங்கள்.
வாகனத்தின் நம்பர் பிளேட்டுடன் கூடிய கலர் போட்டோ, வாகனம் கடந்த வேகம் மற்றும் நேரம் ஆகியவற்றுடன் கூடிய பிரிண்ட் அவுட்டை உடனடியாக வழங்கும். குரல் பதிவு(Voice Record).
வாகனத்தின் வேகம் வாய்ஸ் மூலமாகவும் பதிவு செய்யப்படும்.
இதன் மூலம் இ-சலான் (e-Challan) மற்றும் நேரடி விசாரணை மூலம் ஓவர் ஸ்பீட் வழக்குகள் பதிவு செய்யப்பட உள்ளன. மதுரை மாவட்டத்தின் அனைத்து நான்கு வழிச்சாலைகளிலும் வேகத்தை கட்டுப்படுத்தி சாலை விபத்துகளை தடுக்கும்பொருட்டு விரிவுபடுத்தப்படவுள்ள இப்பணியினை செய்தி சேகரிக்க
அனைத்து பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் பார்வையிட்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்



















