சென்னை : சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஆல் இந்தியா அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தலைமை அலுவலகத்தில் இன்று வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அதிமுகவில் இரு தரப்புகளாக பிரிவினை ஏற்பட்டுள்ள நிலையில், பதற்றமான சூழல் உருவாக வாய்ப்புள்ளதாக கருதப்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தலைமை அலுவலகம் சுற்றுவட்டார பகுதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், முக்கிய நுழைவாயில்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அரசியல் பரபரப்பு நிலவி வரும் சூழலில், அங்கு கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் வருகையும் அதிகரித்துள்ளது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















