திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர், புதுமனைத் தெருவைச் சேர்ந்த அலியார் (55). இவர், வீரவநல்லூர் பிரதான சாலையில் நகைக் கடை நடத்தி வருகிறார். (07.04.26) இரவு வேலை நேரம் முடிந்து கடையைப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளார். மறுநாள் காலை உரிமையாளர் அலியார், கடையைத் திறந்த போது கடையின் பின்பக்க சுவரில் துளையிட்டு கடையில் இருந்த தங்கம், வெள்ளி நகைகள், ரூ. 1 லட்சம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. தகவல் அறிந்த சேரன்மகாதேவி காவல் துணைக் கண்காணிப்பாளர், அஸ்வத் அன்டோ ஆரோக்கியராஜ், வீரவநல்லூர் காவல் ஆய்வாளர், கவிதா ஆகியோர் சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இது தொடர்பாக வீரவநல்லூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















