கன்னியாகுமரி: காவல்துறையில் பணியாற்றி இந்த மாத இறுதியில் ஓய்வு பெறவுள்ள 4 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 4 சிறப்பு உதவி ஆய்வாளர்கள், அவர்களுடைய குடும்பத்தினருடன் (29.04.2026) அன்று கன்னியாகுமரி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் R. ஸ்டாலின் அவர்களை சந்தித்து கலந்துரையாடினர். அவர்களின் நீண்டகால நேர்மையான மற்றும் அர்ப்பணிப்பான சேவையை பாராட்டி, எஸ்பி அவர்கள் சான்றிதழ்கள் மற்றும் வாழ்த்து மடல்கள் வழங்கி கௌரவித்தார். மேலும், பணி ஓய்விற்குப் பிறகு ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் குடும்பத்துடன் வாழ வாழ்த்துகள் தெரிவித்து, அவர்களின் சேவையை உயரமாக பாராட்டினார்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா



















