திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஆறு மாத கர்ப்பம் அடைந்ததை அறிந்த பெற்றோர் இது குறித்து ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரை தொடர்ந்து காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.லட்சுமி பிரபா அவர்கள் விசாரணை மேற்கொண்டதில் சிறுமியை திருமணம் செய்வதாக கூறி 6 மாத கர்ப்பமாக்கிய நபர் ஒட்டன்சத்திரம் காந்தி நகரைச் சேர்ந்த நாகராஜ் (20) என்பது தெரியவந்தது இதனை அடுத்து அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் இதோ: 1. இளைஞர் மற்றும்...