மதுரை: சட்டமன்றத் தேர்தல் – 2026ஐ முன்னிட்டு, 100% வாக்குப்பதிவை வலியுறுத்தியும், பொதுமக்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாக்களிக்க நம்பிக்கை அளிக்கும் வகையிலும், மதுரை மாவட்ட காவல் துறை சார்பில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி, இன்று (16.04.2026) மேலூர் உட்கோட்டம், மேலவளவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிடாரிப்பட்டி, ஏ. வள்ளலாப்பட்டி மற்றும் சென்னஹரம்பட்டி பகுதிகளில் அணிவகுப்பு நடைபெற்றது.
இந்த அணிவகுப்பில் மேலவளவு காவல் ஆய்வாளர் திரு. முத்துப்பாண்டி தலைமையில் காவல்துறையினர், ஆளிநர்கள் மற்றும் மத்திய சேம காவல் படையினர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நடவடிக்கை, அமைதியான மற்றும் சீரான தேர்தலை உறுதி செய்ய காவல்துறையின் உறுதியை வெளிப்படுத்துகிறது.




















