திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் பிரெஸ்நேவ் தலைமையில் SSI.சந்திரன், காவலர் சுரேஷ்பாபு உள்ளிட்ட தேர்தல் பறக்கும் படை குழுவினர் நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது கருக்காம்பட்டி பகுதியில் நள்ளிரவில் சந்தேகத்திற்கிடமாக நடந்து சென்ற 2 பேரை நிறுத்தி விசாரணை மேற்கொண்ட போது அவர்கள் தம்மனம்பட்டியை சேர்ந்த ராமசாமி மகன் சக்திவேல்(44). பெருமாள் மனைவி பிரியா(36) என்பது தெரியவந்தது மேலும் அவர்கள் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ.1.80,000 பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வேடசந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.




















