விருதுநகர்: விருதுநகர் முனைவர் ந. ஸ்ரீநாதா, இ.கா.ப. அவர்கள் (13.05.2026) மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற காவலர் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்கள் மற்றும் காவல் பணியாளர்கள் கலந்து கொண்டு, தங்களது பணிச்சார்ந்த மற்றும் நலன்சார்ந்த கோரிக்கைகள், குறைகள் ஆகியவற்றை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் முன்வைத்தனர்.
காவலர்களின் குறைகளை பொறுமையாகக் கேட்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அவற்றிற்கு விரைவான மற்றும் உரிய தீர்வுகளை வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கினார். மேலும், காவலர்களின் நலன் மற்றும் பணிச்சூழலை மேம்படுத்த காவல் துறை தொடர்ந்து முன்னுரிமை அளித்து செயல்படும் எனவும் தெரிவித்தார். இந்தக் கூட்டம் காவலர்களிடையே நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா




















