திருப்பத்தூ: 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை (04.05.2026) அன்று வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு (03.05.2026) அன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V. சியாமளா தேவி அவர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவான விளக்கங்களுடன் அறிவுரைகள் வழங்கினார். மேலும், வாக்கு எண்ணிக்கை நாளில் பாதுகாப்பு பணிக்காக காவல்துறை, துணை ராணுவம், தமிழ்நாடு சிறப்பு காவல் படை மற்றும் ஊர்க்காவல் படையினர் உள்ளிட்ட சுமார் 810 போலீசார் பணியில் ஈடுபட உள்ளனர்.



















