திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அவுட்டர் பகுதியில் உள்ள இருசக்கர வாகன பழுதுபார்க்கும் கடையில் வாட்டர் சர்வீஸ் செய்யும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நத்தம் அருகே அவிச்சிப்பட்டியைச் சேர்ந்த செழியன் என்பவர் இருசக்கர வாகன பழுதுபார்க்கும் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், அவரது மகன் கிஷோர் பாண்டியன் கடையில் வாகனங்களுக்கு வாட்டர் சர்வீஸ் செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் கிஷோர்பாண்டியன் கடுமையாக காயமடைந்தார். உடனடியாக அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த நத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















