திருப்பத்தூர்: 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திருப்பத்தூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் குறித்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி வி. சியாமளா தேவி, இ.கா.ப., அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டார். (19.04.2026) திருப்பத்தூர் தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மலை திருப்பத்தூர், மலயான்டிப்பட்டி கீழூர் மற்றும் சேம்பரை பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வின் போது, வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள், அடிப்படை வசதிகள் மற்றும் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து பரிசோதனை செய்யப்பட்டு, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.




















