திருநெல்வேலி : திருநெல்வேலி சரகத்திற்குட்பட்ட திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட 182 கஞ்சா வழக்குகளில், தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட 680 கிலோ 929 கிராம் கஞ்சாவினை அழிக்க, நீதிமன்றம் மற்றும் சரக போதைப்பொருள் அழிப்பு குழுவின் (Drug Disposal Committee) பரிந்துரைபடி. திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் ப. சரவணன், இ.கா.ப., தலைமையில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், Dr. V. பிரசண்ண குமார், இ.கா.ப., முன்னிலையில், திருநெல்வேலி மாவட்டம் பொத்தையடி பகுதியில் உள்ள ASEPTIC SYSTEMS BIO MEDICAL WASTE MANAGEMENT COMPANY என்ற தனியார் நிறுவனத்தில் தீயிட்டு எரித்து அழிக்கப்பட்டன.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்















