திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் துறை சார்பில், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் – 2026 தொடர்பாக தேர்தல் பிரிவில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு (12.05.2026) பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V. சியாமளா தேவி, காவல்துறையினரை நேரில் அழைத்து பாராட்டினார்.
தேர்தல் காலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை சிறப்பாக பராமரித்தல், பாதுகாப்பு ஏற்பாடுகளை திறம்பட மேற்கொள்ளுதல், வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை பணிகளில் முழு ஒத்துழைப்புடன் செயல்பட்ட காவல்துறையினரின் அர்ப்பணிப்பு மிக்க சேவையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார். மேலும், பொதுமக்களின் நலன் மற்றும் பாதுகாப்பை முன்னிறுத்தி இதேபோன்று தொடர்ந்து பொறுப்புணர்வுடன் மற்றும் அர்ப்பணிப்புடன் பணியாற்றுமாறு காவல்துறையினருக்கு அறிவுறுத்தினார்.




















