திண்டுக்கல்: திண்டுக்கல் சென்னமநாயக்கன்பட்டி நாடக மேடை அருகே கடந்த மாதம் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த விகாஸ்டிக்கா(30). என்பவர் ரத்த காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்தவரை தாடிக்கொம்பு போலீசார் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு சிகிச்சையில் இருந்த விகாஸ்டிக்கா சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இது தொடர்பாக தாடிக்கொம்பு போலீசார் சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்தனர்.
இது குறித்து புறநகர் டிஎஸ்பி சங்கர் உத்தரவின் பேரில் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் சார்பு ஆய்வாளர் பாண்டியன் மற்றும் காவலர்கள் அப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டபோது மேற்படி சம்பவம் கொலை என தெரிய வந்ததை தொடர்ந்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சென்னமநாயக்கன்பட்டி சேர்ந்த சந்தனமணி(27). சசிகுமார்(33).முத்துராஜ்(எ) கசாயி(26). ஆகிய 3 பேரை கைது செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















