திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் பகுதியில் வடமதுரை சார்பு ஆய்வாளர் சுரேஷ்பாபு தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது ரயில்வே கேட் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த பழைய அய்யலூரைச் சேர்ந்த வீரமுத்து என்பவரை போலீசார் கைது செய்தனர் மேலும் அவரிடமிருந்து 25லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்தனர்.
மேலும் போலீசார் முதல் கட்ட விசாரணையில் பழனியில் இருந்து லாட்டரி சீட்டுகள் வாங்கி அய்யலூரை சுற்றியுள்ள கிராமங்களில் விற்பனை செய்தது தெரியவந்தது மேலும் பழனியில் இருந்து லாட்டரி சீட்டுகள் விநியோகம் செய்யும் நபர் யார் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















