திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பழனி தாலுகா காவல் சரகத்திற்குட்பட்ட இலட்சலபட்டி கிராமத்தில், மூதாட்டியை கத்தி காட்டி மிரட்டி பணம் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இச்சம்பவம் தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரிகளிடம் விரிவாகக் கேட்டறிந்தார்.
மேலும், கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைவில் கைது செய்யும் வகையில் விசாரணையை துரிதப்படுத்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா



















