திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூர் பேரூராட்சி பகுதிகளில் தனியார் வணிக வளாகங்களில் கமர்சியல் சிலிண்டர்களுக்கு பதிலாக வீட்டு உபயோக சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுவதாக பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் வட்ட வழங்கல் அலுவலருக்கு தகவல் வந்துள்ளது. அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் பொன்னேரி வட்ட வழங்கல் அலுவலர் சிவகுமார் தலைமையில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டபோது மீஞ்சூரில் 4 சிலிண்டர்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் வணிக நிறுவனங்களுக்கு கமர்சியல் சிலிண்டர்களை தவிர பொதுமக்கள் பயன்படுத்தும் வீட்டு உபயோக சிலிண்டர்களை பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தி சிலிண்டர்களை உரிய கேஸ் ஏஜென்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு




















