திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 1435-பசலி வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் பொன்னேரி, பழவேற்காடு, திருப்பாலைவனம், தடப்பெரும்பாக்கம், கரிமணல், அவுரி பாக்கம், சிருளப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பட்டா, பிறப்பு, இறப்பு, சான்றிதழ், நிலம் மற்றும் வீட்டுமனை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது. இதில் பொன்னேரி வட்டாட்சியர் சோமசுந்தரம், உதவி துணை வட்டாட்சியர் பாரதி, துணை வட்டாட்சியர் செந்தில், திருப்பாலைவனம் வருவாய் ஆய்வாளர் பிரேம்நாத், பழவேற்காடு கிராம நிர்வாக அலுவலர் ராஜா,பொன்னேரி வட்டாட்சியர் அலுவலக பணியாளர்கள் ஆ.அன்பு செல்வன், ஹேமலதா, பத்மா, தமிழ்செல்வி, கோகுல் வசந்த், சிவகாமி, சுப்பிரமணி, ஸ்ரீராம், ஜெய்கணேஷ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு




















