திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே குள்ளனம்பட்டி சேர்ந்த கிருஷ்ணன் மகன் பிரகாஷ்ராஜ்(26) இவர் கடந்த 11-ம் தேதி மாலை கடைக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் இன்று நல்லாம்பட்டியை அடுத்த பெருமாள்கோவில்பட்டி அறிஞர் அண்ணா நகரில் உள்ள கிணற்றில் அழுகிய நிலையில் மிதந்து கொண்டிருந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரகாஷ்ராஜின் உடலை மீட்டனர். தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் சார்பு ஆய்வாளர் மோகனப்பிரியா மற்றும் காவலர்கள் பிரகாஷ்ராஜின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா



















