திண்டுக்கல் : திண்டுக்கல் மாநகராட்சி நகர் நல அலுவலராக பரிதாவணி பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சுகாதார அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் மாநகராட்சி மேயர் இளமதியை சந்தித்து மாநகர் நல அலுவலருக்கு எதிராக புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில் தெரிவித்து இருப்பதாவது-: மாநகர் நல அலுவலர் எங்களை முறையாக பணி செய்ய விடுவதில்லை, அலுவலக பணிகளை தாமதப்படுத்துகிறார். இதனால் கோப்புகளில் அவரது கையெழுத்து பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது பணியாளர்களை அவமரியாதையாக திட்டுகிறார். இதனால் எங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது. என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




















