திண்டுக்கல் : 2009 ஆம் ஆண்டு தமிழக காவல்துறையில் பணி நியமனம் பெற்று,பணியில் இருக்கும் போது மறைந்த காவலர்களின் குடும்பத்திற்கு உதவும் வகையில் சக காவலர்கள் மூலம் தொடங்கப்பட்ட 2009 பேட்ச் காவல்துறை உதவும் உள்ளங்கள் குழு வாயிலாக நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்ட வாரியாக குழு அட்மின்கள் நியமிக்கப்பட்டு மாவட்ட வாரியாக பணத்தை 2009 பேச்சு காவலர்களிடமிருந்து பெறப்பட்டு உயிர் இழந்த காவலர் குடும்பங்களுக்கு தரப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்திற்கு அட்மின்களாக பழனியில் பணி புரியும் தலைமை காவலர் சரவணன், கொடைக்கானலில் பணிபுரியும் தலைமை காவலர் திருமலை, திண்டுக்கல்லில் பணிபுரியும் தலைமை காவலர் செந்தில், பெண் தலைமை காவலர் இந்திரா, மற்றும் தலைமை காவலர் ராஜசேகர் மற்றும் பாண்டி உள்ளனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தை சார்ந்த
தெய்வத்திரு பன்னீர் செல்வம் பணியில் இருக்கும்போது (09/12/25) இல் மரணம் அடைந்தார் எனவே அவரின் குடும்ப நலன் கருதி குழு மூலமாக (20/05/2026) அன்று பன்னீர்செல்வம் குடும்பத்தினரிடம் நிதி உதவியாக 24,86,394 ரூபாய் வழங்கப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















